Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சோமரசம்பேட்டை அருகே பேராசிரியரின் மகள் ஆணாக மாற விரும்பியதை கண்டித்ததால் பட்டதாரி இளம் பெண் தற்கொலை .

0

'- Advertisement -

திருச்சி சோமரசம்பேட்டை அருகே பேராசிரியரின் மகள் ஆணாக மாற விரும்பியதை கண்டித்ததால் பட்டதாரி இளம் பெண் தற்கொலை .

 

Ad banner

திருச்சி சோமரசம்பேட்டை வாசன் வேலி 11 -வது குறுக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்  முருகானந்தம் (வயது 52). கல்லூரி பேராசிரியர். இவரது மகள் தரங்கனி வயது 23.  பி டெக் பட்டம் பெற்றுள்ள இவர் பெங்களூரில் பணியாற்றி வந்தார்.

TVK ad

இவருடைய நடவடிக்கையில் சமீப காலமாக மாற்றங்கள் தென்பட்டதாக தெரிகிறது. பெரும்பாலான நேரங்களில் ஆண் தோற்றத்தை விரும்பியுள்ளார் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் வீட்டிலிருந்து பணியாற்றி வந்தார்அப்போது சிறுவர்களைப் போல முடியை வெட்டிக்கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் எதிர்காலம் பாதிக்கக்கூடும் என்று கவலை தெரிவித்தனர்.மேலும அண்மையில் அவரை அவ்வாறு செய்ய வேண்டாம் என

கண்டித்ததாக கூறப்படுகிறது.  இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான தரங்கனி  யாரும் எதிர்பாராத வகையில் தூக்கு போட்டு தொங்கி உள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து முருகானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.