திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் 3 குழந்தைகளுடன் மாயம்
தில்லைநகர் போலீசார் விசாரணை :-
திருச்சி தென்னூர் ஜென்ரல் பஜாரை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் காட்டுரை சேர்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி, கணவனுடன் கோபித்துக் கொண்டு தென்னூர் ஜென்ரல் பஜாரில் உள்ள தந்தை கணேசன் வீட்டில் வசித்து வந்தார் இந்நிலையில் கடந்த 21 ந் தேதி கணேசன் மகளிடம் கணவருடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறியுள்ளார்.

இதையடுத்து
மனம் உடைந்த மகள்,மூன்று பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கணேசன் தனது மகள் மற்றும் மூன்று குழந்தைகளையும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்து உள்ளார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கணேசன் தில்லைநகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் தில்லை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று குழந்தைகளுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.

