தமிழ்நாடு வணிகர் சங்க பொறுப்புகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய வணிகர் சங்கம் தொடங்குகிறார் கந்தன்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து எஸ். கந்தன் பதவி விலகினார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய வணிகர் சங்கம் தொடங்குகிறார் கந்தன்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு தலைவராக எஸ்.கந்தன்,செயல்பட்டு வருகிறார். மேலும் திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கம் தலைவர்,அண்ணா தொழிற்சங்கம் திருச்சி மாவட்ட தலைவராக உள்ளார். கடந்த 24 வருடங்கள் இந்திய ராணுவத்தில் ராணுவ வீரராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்ணா தொழிற்சங்கம் திருச்சி மாவட்ட தலைவராக இருந்த அவர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில்
தமிழக வெற்றி கழகத்துடன் சங்க நிர்வாகிகளுடன் இணைந்தார். கடந்த 30 ஆண்டுகளாக சங்கத்தில் செயலாற்றி பல்வேறு நலப் பணிகளை செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை யும் செய்து வருகிறார்.தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளார்.தொழிலாளர் உட்பட அனைவரிடமும் அன்பாக பழகும் குணம் உடையவர் கந்தன் இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் பதவியில் இருந்து இன்று விலகினார். இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவுடன் புதிய வணிகர் சங்கத்தை தொடங்க உள்ளதாக எஸ். கந்தன் தெரிவித்தார்.
இதற்கிடையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலுக்கு கந்தன் எழுதியுள்ள கடிதத்தில் நான் வகித்த துணைத் தலைவர் பதவியில் இருந்து என்னை விடுவித்து கொள்கிறன். கடந்த 98ம் ஆண்டில் இருந்து எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

