திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று தூர் வாரும் பணியை மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தொடங்கி வைத்தார்.
திருச்சி தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று (15.05.20265) தூர் வாரும் பணியை மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைஅருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது.சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தூர்வாரப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகரின் முக்கிய அடையாளச் சின்னமான திருச்சி மலைக்கோட்டை அடிவாரம் என்.எஸ்.பி ரோடு பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் நீர் முழுவதும் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இக்குளம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானதாகும். இக்குளத்தின் மொத்தப் பரப்பளவு 20984 சதுர மீட்டர் ஆகும். இக்குளத்தின் ஆழம் 3.50 மீட்டர் ஆகும். கொள்ளளவு 73.444 கன.மீட்டர். தூர்வாரும் பணி ரூ.25.00 லட்சம் உத்தேச மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு பின்பு தெப்பக்குளம் சுற்றுப்பகுதிகளில் நடைபாதை அமைத்து, பூங்கா அமைத்து அழகுப்படுத்துவதற்கான பணியினை மேற்கொள்வதற்கு மதிப்பீடு மாநகராட்சி மூலம் தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மூலம் இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தத் திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்வுக்கு பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜு தமிழ்நாடு வணிகர் சநிகழ்வுக்கு பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வெ. கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார்.மேலும் இந்த நிகழ்வில் திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன்,மங்கள அண்ட் மங்கள் உரிமையாளர் மூக்கப் பிள்ளை, ஆனந்தா கார்ப்பரேஷன் ரமேஷ்,மாநில இணைச்செயலாளர் தீபக் ராஜா, திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், திருச்சி மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், திருச்சி மாநகர செயலாளர் வி.பி. ஆறுமுகப்பெருமாள், உதவி ஆணையர் சசிகலா,உதவி செயற் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மலைக்கோட்டை கோவில்அறங்காவலர் குழுத் தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

