நடிகர் விஜய்க்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய கிழக்குத் தொகுதி மண்ணின் மைந்தன் ஆர்.கே. ராஜா தவெக சார்பில் போட்டி ?
தமிழக அரசியல் களத்தில் 2026 தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்ற விஜய், தற்போது ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயாராகி வருகிறார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்யப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தனது சட்டசபை உறுப்பினர் பதவியை பெரம்பூர் தொகுதியில் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ள நிலையில், அவர் காலி செய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
சகாயம் ஐஏஎஸ் அதிகாரி,லால்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த கு. ப . கிருஷ்ணன்,நடிகை திரிஷா ஆகியோர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார்கள் என கூறப்பட்ட நிலையில் தற்போது மாபெரும் திருப்புமுனையாக தான் தான் நட்சத்திர நடிகராக அங்கீகாரம் பெரும் முன்பே தனக்காக முதல் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜாவுக்கு நடிகர் விஜய் அந்த வாய்ப்பை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் விஜய் போட்டியிட வேண்டும் என முதன் முதலில் விருப்ப மனு அளித்து பணம் கட்டிய வரும் இந்த ஆர்.கே. ராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது ..
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் மிகவும் நம்பிக்கைக்குரியவர் ஆர்.கே ராஜா
தனது கார் ஓட்டுனர் மகன் ஆட்டோ டிரைவரை சட்டமன்ற உறுப்பினராகி அழகு பார்த்தவர் நடிகர் விஜய்,அதே போன்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்காக ரசிகர் மன்றம் தொடங்கி இன்று வரை திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் விஜய் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வந்தார். மேலும், மேற்கு, ஸ்ரீரங்கம் தொகுதிகளிலும் நடிகர் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர் , மேலும் திருச்சி கிழக்குத் தொகுதியின் மண்ணின் மைந்தர் எனவே இவரை திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட வைத்து எம்எல்ஏவாக மாற்றி அழகு பார்ப்பார் விஜய் என்பது அனைவரின் நம்பிக்கை .

இவர் திருச்சி கிழக்கு தொகுதியில் மட்டுமல்ல திருச்சி மாவட்டம் முழுவதும் அனைவருக்கும் பரிச்சயமானவர் .மக்கள் சக்தி இயக்கம்,தண்ணீர் அமைப்பு போன்ற சமூக சேவை இயக்கங்களில் இணைந்து தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருபவர்.


நடிகர் விஜய்யின் வெற்றிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது .…
இத்தகவல் குறித்து ஆர்.கே ராஜாவிடம் கேட்டபோது …… இதுவரை எந்த தகவலும் வரவில்லை, ஆனால் தளபதி என்ன கூறுகிறாரோ அதை செய்ய தயாராக உள்ளேன். இத்தகுதியில் யார் போட்டியிட்டாலும் அவர்களது வெற்றிக்காக மீண்டும் உழைக்க தயாராக உள்ளேன் என கூறினார்.
( இத்தொகுதியில் அறிமுகம் இல்லாத ஒருவரை நிறுத்துவதற்கு பதில் அனைவரும் அறிந்த ஆர்.கே.ராஜா வெற்றி பெற்றால் கிழக்குத் தொகுதி பொதுமக்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் …)

