Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் டூவீலர் திருடிய சிறுவன் கைது

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் டூவீலர் திருடிய சிறுவன் கைது

Ad banner
TVK ad

திருச்சி துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43) இவர் பிரபல அகர்பத்தி நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று காந்தி மார்க்கெட் பகுதியில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு கடைகளுக்கு விற்பனை தொடர்பாக பேச சென்று விட்டார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது டூவீலர் திருடு போனது தெரிய வந்தது.

இதேபோன்று திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பூட்டி இருந்த மருத்துவமனையில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த பணம் ரூபாய் 6000 திருடு போனதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன் காட்சிகள் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.