Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக வுக்கு ஆதரவு என வதந்தி பரவிய நிலையில் நடிகர் அஜித்குமாரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சந்தித்த பரபரப்பு பின்னணி

0

'- Advertisement -

தமிழக 17 வது சட்டசபை தேர்தல் நடந்த 23ஆம் தேதி நடைபெற்றதுஎன் வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் அன்று வாக்களித்த பின்

Ad banner

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், “மாற்றம் தேவையில்லை” (No need to change) என திமுகவுக்கு ஆதரவாக நடிகர் அஜித் கூறியதாக தகவல்கள் தீயாக பரவியது (தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சமமாக தமிழகத்தில் ரசிகர்கள் வைத்துள்ளார் நடிகர் அஜித்இவரை தமிழ்நாட்டில் தல என அன்புடன் அழைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது).

.சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகள் குறித்து, நடிகர் அஜித்குமாரின் தரப்பில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெளிவுபடுத்தினார்.நடிகர் அஜித் யாருக்கு எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என கூறியிருந்தால் இந்த நிலையில் நேற்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நடிகர் அஜித்தை சந்தித்தது குறித்து அரசியல் பின்னணி எதுவும் உள்ளதா என பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தது.

இது குறித்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தரப்பில் விசாரித்த போது நடிகர் அஜித்குமார் நல்ல மனிதர் , மே 1ஆம் தேதி ஆன நேற்று அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் களில் மேலும் வெற்றி பெறவும் ,மேலும் பல வெற்றி படங்களை தரவும் கூறி அமைச்சர் அவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தான் தெரிவித்தார்,

இதில் வேற ஒன்றும் அரசியல் பின்னணி கிடையாது என தெளிவுபடுத்தி உள்ளனர்.

இதனால் பரபரப்பாக பரவி வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.