Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: 9 ம் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை.

0

'- Advertisement -

திருச்சி அருகே பள்ளியில் படித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அப்பள்ளியின் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ad banner

திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்த முசிறி ஜடமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெ. குமரவேல் (வயது 40) என்பவா் சிறுமியுடன் பேசி பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, 2019-ஆம் ஆண்டு சிறுமியுடன் பலமுறை உல்லாசமாக இருந்து கொண்டுள்ளார்.

 

TVK ad

ஒரு கட்டத்தில் இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கணித ஆசிரியா் குமரவேலை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் நேற்று திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றவாளி குமரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.