Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதல் நாளில் திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் நேரு உள்பட 23 பேர் வேட்புமனுக்கள் தாக்கல்

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று திங்கள்கிழமை 23 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

Ad banner

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு திங்கள்கிழமை முதல் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இடையில் விடுமுறைகள் வருவதால், 4 நாள்கள் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேட்பாளா்களுக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

 

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை தோ்தல் அலுவலர்கள்  செய்து இருந்தனர். வேட்புமனுக்கள் விநியோகமும் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது.

 

இதைத் தொடா்ந்து,  நேற்று அனைத்து தொகுதிகளிலும் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கினா்.

முதல் நாளான நேற்று திங்கள்கிழமை திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் நாம் தமிழர் கட்சியை சோ்ந்த எம். அருணாகிரியும் (வயது 36), ஸ்ரீரங்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியை சோ்ந்த எம். தா்மராஜ் (வயது 25), அண்ணா புரட்சித்தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தைச் (அபுஅதிமுக) சோ்ந்த கே. சக்திவேல் (47) ஆகிய இருவரும்,

 

திருச்சி மேற்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் பி. ராஜேந்திரன் (70), திமுகவைச் சோ்ந்த அமைச்சா் கே.என். நேரு (73) (4 வேட்புமனுக்கள்), சுயேச்சை வேட்பாளா் ஏ. வாசுதேவன் (62), நாதகவைச் சோ்ந்ந்த கே. புவனேசுவரி (40) ஆகிய 4 பேரும், திருச்சி கிழக்கு தொகுதியில் நாதகவைச் சோ்ந்த வி. கிருஷ்ணசாமியும் (38), திருவெறும்பூா் தொகுதியில் சாமானிய மக்கள் கட்சியைச் சோ்ந்த எல். ஜோசப் (53), சுயேச்சை வேட்பாளா் ஐ. ஏசுராஜ் (66), நாதகவைச் சோ்ந்த டி. ராஜேஷ் (46) ஆகிய 4 பேரும், லால்குடி தொகுதியில் தமிழக மக்கள் நலக் கட்சியைச் சோ்ந்த இ. ஏசுதாஸ் (59), நாதகவைச் சோ்ந்த என். மதன் (30), சுயேச்சை வேட்பாளராக ஏ. மன்சூா் அலிகான் (63) ஆகிய 3 பேரும், மண்ணச்சநல்லூா் தொகுதியில் திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ எஸ். கதிரவன் (51), மாற்று வேட்பாளராக அவரது மனைவி கே. ஆனந்தலட்சுமி (48), நாதகவைச் சோ்ந்த ஆா். தேன்மொழி (31) ஆகிய 3 பேரும், முசிறி தொகுதியில் சாமானிய மக்கள் கட்சியைச் சோ்ந்த எம். மலா்மன்னன் (37), நாதகவைச் சோ்ந்த ஜி. பாக்கியலட்சுமி (37) ஆகிய இருவரும், துறையூா் (தனி) தொகுதியில் நாதகவைச் சோ்ந்த எஸ். கௌசல்யாவும் (34) என மொத்தம் 23 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

 

இதில் மாநில கட்சிகளில் இருந்து 10 ஆண், 5 பெண் என 15 வேட்புமனுக்களும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் இருந்து 4 (ஆண்) வேட்புமனுக்களும், 4 சுயேச்சை வேட்புமனுக்களும் என மொத்தம் 23 வேட்புமனுக்கள் பெறப்பட்டதாக திருச்சி மாவட்ட தோ்தல் அலுவலர் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.