Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய சிறையில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில்செல்போன், போதை பொருட்கள் சிக்கியது.

0

'- Advertisement -

திருச்சி மத்திய சிறையில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில்செல்போன், போதை பொருட்கள் சிக்கியது.

திருச்சி மத்திய சிறையில் சுமார் 500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இதே போன்று சிறப்பு முகாம் சிறையும் இங்கு உண்டு. இதில் இலங்கை அகதிகள் மற்றும் வெளிநாட்டு விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பது வழக்கம்.

இந்நிலையில் சிறையில் அடிக்கடி கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன் புழக்கம் இருந்து வருகிறது. இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் திடீர் என்று போலீசார் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம் .அந்த வகையில் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பெயரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் வெளிநாட்டு விசாரணை கைதிகள் தங்கி இருந்த அறையில் செல்போன் மற்றும் போதை பொருட்கள் சிக்கியது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இன்று விடியற்காலை முதல் தொடர்ந்து 5 மணி நேரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சிறையில் உள்ள விசாரணை, மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் உள்ள அறைகள், கழிவறைகள் சுற்று சுவர்கள் பகுதி, வறண்ட பகுதிகளில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட புகையிலை, போதைப் பொருட்கள் இருக்கிறதா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.