ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு .யார் அவர் ?
திருச்சி ரெயில்வே போலீசார் விசாரணை .
திருச்சி
ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளார். இறந்த நபர் பச்சை கலர் அரைக்கை சட்டையும், ஊதா மற்றும் கருப்பு நிறத்தில் கைலியும், அணிந்துள்ளார்.
இதையடுத்து இறந்த உடலை கைப்பற்றி திருச்சி இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் சேவுகன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கிற்கு
அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :90805 63321 மற்றும் 79044 19620 ஆகியன்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க திருச்சி இரும்பு பாதை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

