Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது.

0

'- Advertisement -

திருச்சியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது.

 

Ad banner
TVK ad

திருச்சி காமராஜ் நகர் பகுதியில் உள்ள பொது கழிவறை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் திருச்சி தாரநல்லூர் காமராஜ் நகர் பகுதி சேர்ந்த பழனி அம்மாள் (வயது 60

) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றதாக அவரை காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 3 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் 300 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.