திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்றவர் கைது.
திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் (வயது 42)என்பது தெரிய வந்தது.மேலும் இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

