Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 2 போ் கைது.

0

'- Advertisement -

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Ad banner

கோவை திருச்சி சாலை, ஹைவேஸ் காலனி மற்றும் சின்னதுரை கடை வீதி பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயசந்திரன் தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

 

TVK ad

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தரமகாலிங்கம் (வயது 29), கோவை தெற்கு உக்கடம், புல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த முஸ்தபா (வயது 28) என்பதும், தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களான இருவரும் தங்களது அறைகளில் கஞ்சா, மெத்தம்பெட்டமைனை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களது அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ 81 கிராம் கஞ்சா, 48 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.