திருச்சியில் இன்று நடைபெற்ற க்ரைம் செய்திகள் :
1.
கே.கே. நகரில் கார் மெக்கானிக் மயங்கி விழுந்து சாவு.
திருச்சி கே. சாத்தனூர் கவி பாரதி நகரை சேர்ந்தவர் கேசவன் (வயது 47) இவர் கார் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்,இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் இந்த நிலையில் நேற்று கேசவன் அண்ணா ஸ்டேடியம் ரேஸ்கோர்ஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார். இதை அடுத்து அவரை திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதித்தினர், அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் கேசவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2.
திருச்சியில் லாட்ஜில் பிணமாக கிடந்த உணவு மாஸ்டர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தானமூர்த்தி (வயது 48) இவர் திருச்சி பீரங்கிகுள தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி உறையூர் பகுதியில் உள்ள ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று சந்தன மூர்த்தி அவரது அறையில் குடிபோதையில் மயங்கி இறந்து கிடந்தார்.இது குறித்து தகவல் அறிந்து கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தானமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசுமகாத்மா காந்தி நினைவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தானமூர்த்தி இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3.
காந்தி மார்க்கெட்டில்
பழக்கடை தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை .
திருச்சி காந்தி மார்க்கெட் நெல்பேட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார் சவுத்ரி (வயது 30 ) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று குடிபோதையில் வீட்டின் இரும்பு உத்தரத்தில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முகேஷ் குமார் சவுத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4.
வெவ்வேறு சம்பவங்களில்
திருச்சியில் அனுமதி இன்றி மது பாட்டில் விற்ற இரண்டு பேர் கைது .
68 மது பாட்டில்கள் பறிமுதல் .
திருச்சி இபி ரோடு லூர்து சாமி பூங்கா அருகில் அனுமதி இன்றி மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது அங்கு ஒருவர் மது பாட்டில் விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்த போது இ.பி. ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த முருகவேல் (வயது 45) என்பது தெரிய வந்தது.
இதே போன்று மதுவிலக்கு போலீசார் இபி ரோடு அந்தோணியார் கோவில் தெரு பகுதியில் மதுபாட்டில் விற்ற செல்வராஜ் என்பவரின் மனைவி கோமதி (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேற்கண்ட இரண்டு பேரிடமிருந்து 68 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

