Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தில் 3500 இளைஞர்கள் தன்னெழுச்சியாக வந்து இணைந்துள்ளதாக ஜெ பி அறிவிப்பு.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் நல்ல வேட்பாளரை மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் வெகு நாட்களாக பிஜேபி யில் பயணித்து நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்றை தொடங்கி தொடர்ந்து 12 ஆண்டுகளாக மக்கள் பணி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வரும் மக்களின் போராளி அஞ்சா நெஞ்சன் ஜெபி என்ற ஜெயராம் பாண்டியன் அவர்களே சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆனால் இன்று ஜெபி அவர்களிடம் கேட்ட போது அவர் நான் மக்கள் பணி செய்ய பிறந்தவன் எனவும் சட்டமன்ற உறுப்பின்ராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நான் மக்களுக்காக என்ன உதவி கேட்டாலும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Ad banner
TVK ad

நீங்கள் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க இருக்கிறீர்கள் என்று கேட்ட போது அனைத்து கட்சியினரும் நம்முடைய தோழமை கட்சி தான் அனைவரும் என் நண்பர்கள் தான் மக்கள் 100 சதவீத வாக்கு செலுத்த வேண்டும் என்றும் மக்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க யார் வருவார்கள் என்று உங்களுக்கு நம்பிக்கை வருகிறதோ அவர்களுக்கு உங்கள் வாக்கை செலுத்த வேண்டும் என்றும் பணம் பெற்று கொண்டு வாக்கு செலுத்த வேண்டாம் என்றும் அறிவுரை கூறினார்.

தான் என்றும் நேதாஜி வழியில் செல்வோம் எனவும் கூறினார் அது மட்டுமல்லாது தனது இயக்கத்தில் 3500 இளைஞர்கள் தன்னெழுச்சியாக வந்து இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.