Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சியில் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சியில் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு நேற்று திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

 

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 53-ஆவது வார்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ரூ. 45.75 லட்சத்தில் கட்டப்பட்ட மாநகராட்சி மைய அலுவலக நுழைவு வாயில், 52- ஆவது வார்டு கொட்டகொல்லைத் தெருவில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு அலுவலகக் கட்டடம், பீமநகர் பகுதியில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட நாகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கூடுதல் கட்டடம், 53-ஆவது வார்டு அலெக்ஸ்சாண்டிரியா சாலையில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு அலுவலக கட்டடம், வேடுவா தெருவில் ரூ. 29.50 லட்சத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம், 56 ஆவது வார்டு எஸ்.எஸ். நகர் அருகே ரூ. 95 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, 57-ஆவது வார்டு அந்தோணியார் கோவில் தெருவில் ரூ. 15.97 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கழிப்பிடம், ராஜீவ்காந்தி நகரில் ரூ. 31.25 லட்சத்தில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம், எடமலைப்பட்டிபுதூா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப துணை சுகாதார நிலையம், 9-ஆவது வார்டு உறையூர் மருத்துவமனை சாலையில் ரூ. 4.40 கோடியில் கட்டப்பட்ட புதிய தினசரி சந்தை என மொத்தம் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சர் கே என்.நேரு பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா வே. சரவணன், திருச்சி மாநகராட்சி மேயா மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், மாநகர நலுவால் சுபாஷ் காந்தி, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.