Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.திருச்சியில் நடைபெற்ற தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

0

'- Advertisement -

30 ஆண்டுகளுக்கும் மேலாக

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.திருச்சியில்

கே.கே.செல்வகுமார் தலைமையிலான தமிழர் தேசம் கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம்.

தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சங்கீதாஸ் மஹாலில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தமிழர் தேசம் கட்சியின் தலைவரும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனருமான கே.கே. செல்வகுமார் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார்.

முன்னதாக அவர் மத்திய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள மணிமண்டபத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் , மாநில இணை பொதுச் செயலாளர் கள்ளிக்குடி எம். ராஜேந்திரன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க இளைஞர் அணி துரை குணசேகரன், மாநில செயலாளர்கள் கராத்தே செந்தில், மதுரை அழகர், நத்தம் பூமிநாதன், மாநில அமைப்பு செயலாளர் செம். மகுடீஸ்வரன், மாநில பொருளாளர் புதுக்கோட்டை கணேசன், மாவட்டச் செயலாளர்கள் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வள்ளல் மணி, வையம்பட்டி துரை, மணச்சநல்லூர் சதீஸ்வரன், லால்குடி குமார், முசிறி கோல்டு குமார், ஸ்ரீரங்கம் பனையடி , மாநில மகளிர் அணி செயலாளர் கோவை சித்ரா, மதுரை கவிதா கடலூர் மாவட்ட செயலாளர் விஜய ராயலு உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வகுப்புவாரி தொகுப்பு சம இட பங்கீட்டுடன் முத்தரையர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடப்பங்கீட்டை உறுதி செய்திட வேண்டும்.முத்தரையர் இன மக்களின் உட்பிரிவுகளான வலையர், அம்பலக்காரர் சாதியினருக்கு 18 மாவட்டங்களில் தவறுதலாகவும் போலியாகவும் வழங்கப்பட்டுள்ள

மிகவும் பிற்பட்டோர் சாதி சான்றிதழ்களை திரும்ப பெற்றுக் கொண்டு டிஎன்சி அல்லது டிஎன்டி சாதி சான்றிதழ்களை வழங்கிட வேண்டும்,வலையர் புனரமைப்பு வாரியத்தை திருத்தி உடனடியாக அதனை முத்தரையர் மறுவாழ்வு திட்டமாக மேம்படுத்திட வேண்டும்.

உயர் நீதிமன்றங்களில் தமிழ் மொழியை கூடுதல் வழக்காடு மொழியாக அமல்படுத்திட வேண்டும்,

சட்டமன்றத் தேர்தல் வியூகம் :

2026 சட்டமன்ற தேர்தலுக்கு சரியான வியூகம் அமைத்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தமிழர் தேசம் கட்சியினை இடம்பெறச் செய்த தலைவருக்கு (கே கே செல்வ குமாருக்கு) இந்த செயற்குழு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக தங்கி மறுவாழ்வு முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்திட வேண்டும்.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதும் அவர்களின் வலைகளை அருத்தெறிவதும் தொடர்கதையாக வருகிறது இதனால் வரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர் இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வாக 1974- 76 ம் ஆண்டுகளில் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கையின் கடல் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

ஏழை எளிய மீனவர்களுக்கான அரசு மானியத்தை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஓர் மனதாக நிறைவேற்றப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.