Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

செல்போன்களின்உதிரி பாகங்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தனர். திருச்சியில் தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்க மாநில செயலாளர் பேட்டி.

0

'- Advertisement -

ஆன்லைனில் மொபைல் , உதிரிபாகங்கள் விற்பனை தடை செய்ய வேண்டும், பொது இடங்களில் சிம் கார்டு விற்பனை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை.

 

தமிழ்நாடு அனைத்து மொபைல் சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் எழுச்சி மாநாடு திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

இதில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து மொபைல் விற்பனையாளர்கள் மற்றும் பழுது நீக்கும் கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 50 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்ட மொபைல் கடை உரிமையாளர்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

 

மொபைல் போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் துறையில் தற்போதுள்ள அதிநவீன செயல்பாடுகள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

 

தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

 

இந்தியாவிலேயே முதல்முறையாக மொபைல் விற்பனையாளர்களின் எழுச்சி மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது.

 

தமிழகத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் இந்த எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

ஆன்லைனில் மொபைல் மற்றும் மொபைல் உதிரி பாகங்கள் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடை அமைத்து சிம் கார்டு விற்பனை செய்வதையும் அரசு தடை செய்ய வேண்டும் . இதனால் சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.

உலக அளவில் சிப்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏற்றதால் மொபைல் போன் விலை அதிகரித்து உள்ளது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மொபைல் ஃபோன்களின் தேவை அதிகரிக்கும் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.

 

ஆன்லைனில் மொபைல் மற்றும் உதிரி பாகங்கள் விலை கம்மியாக இருப்பதால் பலர் அதை வாங்குகின்றனர், ஆனால் அவை தரமற்ற பொருட்கள், நாங்கள் நல்ல பொருட்களை விற்பனை செய்வதால் பாதிக்கப்படுகிறோம் என்றார்.

 

இந்த மாநாட்டில் தம்ரர சங்க மாநில இணை செயலாளரும், திருச்சி லவ்லி ஃபேன்சி உரிமையாளருமான ஜலாலுதீன், பைசல், லிப்ரா பேன்சி இப்ராம்ஷா ஒரு லிட்டர் ஏராளமான கலந்து கொண்டனர்.

மனதில் நடந்து கொண்ட அனைவருக்கும் காலை டிபன், மதியம் தரமான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.