Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருமணம் ஆன நபருடன் தொடர்பு இருந்ததால் ஹோமியோபதி மருத்துவ மாணவியான தனது மகளை கொன்றதாக தந்தை பரபரப்பு வாக்குமூலம்.

0

'- Advertisement -

சேலத்தில் மருத்துவ மாணவி வர்ஷினி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது அப்பா வரதராஜன் காவல்துறை முன்னிலையில் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ad banner

தனது மகள் திருமணமான ஒருவரை காதலித்ததே இந்த கொலைக்குக் காரணம் என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மகளை இவ்வளவு கொடூரமாக கொல்ல முடியுமா? என்று சேலம் மக்கள் கூடுதல் அதிர்ச்சியில் உள்ளனர்..

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷினி, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஓமியோபதி இறுதி ஆண்டு படித்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி அவர் தங்கியிருந்த அறையிலேயே சடலமாக மீட்கப்பட்டார். அப்போது வர்ஷினி உடம்பு ப்ளூகலரில் மாறியிருந்ததாம்.. அப்படியானால் விஷம் கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் சந்தேகித்தனர்..

 

வர்ஷினியின் சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த இரும்பாலை போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். வர்ஷினி உயிரிழந்த அன்று அவரது அப்பா வரதராஜன் சேலம் வந்து சென்றதும், அதன்பின் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததும் போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மேலும் தலைமறைவாக இருந்த வரதராஜனைத் தேடி வந்த நிலையில், நேற்று அவர் சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.. கைதுக்கு பிறகு வரதராஜன் வாக்குமூலம் ஒன்றை தந்துள்ளார்.. ஒரு தந்தையின் ஆத்திரமும், தவறான கௌரவப் பிடிப்பும் ஒரு உயிரைப் பறித்த சோகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

அதாவது, தனது மகள் வர்ஷினி பள்ளியில் படிக்கும் போதே, அங்கிருந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் ஒருவருடன் காதலில் விழுந்துவிட்டாராம்.. அந்த பயிற்சியாளருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். இந்த விபரத்தை அறிந்த வரதராஜன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

TVK ad

திருமணமான ஒருவருடன் மகளுக்கு இருக்கும் உறவு சமூகத்தில் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று கருதிய அவர், பலமுறை வர்ஷினியை கண்டித்துள்ளார். காதலை கைவிடுமாறு பலமுறை கெஞ்சியும் பார்த்துள்ளார். ஆனால் வர்ஷினி தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

மகளின் மனதை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் அவரைச் சேலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்த்துள்ளார். அங்காவது அவர் தனது காதலை மறந்து படிப்பில் கவனம் செலுத்துவார் என்று வரதராஜன் எதிர்பார்த்தாராம்.. ஆனால், மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற பிறகும் வர்ஷினி அந்தப் பயிற்சியாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.

 

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது கூட வீட்டிற்கு வராமல், அந்தப் பயிற்சியாளரை சந்தித்துவிட்டு சென்றது வரதராஜனுக்கு தெரியவந்துள்ளது. இதை கேள்விப்பட்டுதான் அதிகம் கொந்தளித்துள்ளார்..

 

வடபழனியில் மொட்டை

 

இதனால் சம்பவம் நடந்த அன்று, இது குறித்து இறுதி முடிவெடுக்க வர்ஷினியை நேரில் சந்திக்க சென்றுள்ளார் வரதராஜன்.. மகளின் கையை பிடித்து, முறையற்ற காதலை கைவிடுமாறு மன்றாடியுள்ளார். அப்போதும் வர்ஷினி தனது காதலில் பிடிவாதமாக இருந்ததால், ஆத்திரமடைந்த வரதராஜன் அவரை தாக்கியுள்ளார். கீழே விழுந்த மகளின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியும் கொன்றுள்ளார்..

இந்த கொலையை மறைக்க முயன்ற அவர், மகளின் செல்போனை எடுத்துக் கொண்டு சென்னைக்கும் தப்பி சென்றுவிட்டாராம்.. அங்கு வடபழனி முருகன் கோவிலில் மொட்டையடித்துக் கொண்டு, பிறகு திருப்பதி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு சென்று இத்தனை நாட்களும் பதுங்கியிருந்துள்ளார்..

இறுதியாக நீதிமன்றத்தில் சரணடையலாம் என்ற எண்ணத்தில் சேலம் வந்தபோதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஒரு தந்தையே தன் மகளைக் கொன்ற இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.