Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விசிக தலைவர் திருமாவளவன் எந்தவொரு நிபந்தனையும் இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும்.அகில பாரத பார்க்கவ குல சங்கத் தலைவர் திருமலை ரவி.

0

'- Advertisement -

கல்வி வேலைவாய்ப்பில்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

 

அகில பாரத பார்க்கவகுல சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்,

 

அகில பாரத பார்க்கவகுல சங்க நிறுவனத் தலைவர் திருமலை. ரவி நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில்

நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

பார்க்கவன் பாதுகாப்பு சங்கம், பார்க்கவன் சோழப் பேரவை, தமிழ்க் குடி மக்கள் கட்சி, தென்னாட்டு பார்க்கவ குல சங்கம், மாவீரன் ருசோ ரேவை, தமிழ்நாடு பார்க்க குலவ பேரவை சார்பில் பார்க்கவ குல உரிமை மீட்பு மாநாடு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் திருச்சியில் மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளது.

 

இது குறித்து கூட்டமைப்பு கூட்டம் நடத்தினோம் இந்த

கூட்டதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள், 2 அமைச்சர்கள் வழங்குவதாக தேர்தல் அறிக்கையிலேயே அறிவிக்கும் கட்சிக்கே 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட பார்க்கவ குலத்தின் ஆதரவு என்றும் ,

 

சாதீய வன்கொடுமை தடுப்புச் சட்டம் (பிசிஆர்) தவறாக பழிவாங்கும் முறையில் போதிய விசாரணை இன்றி வழக்கு பதியப்படுவது ஏற்றுக் கொள்ள தக்கதல்ல.அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதுடன் காவல்துறைக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் .

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மாமன்னர் ராசராச சோழனையும், ராசேந்திர சோழனையும் சனாதனிகள் தமிழுக்கும் தமிழருக்கும் விரோதிகள் என்று ஒருமையில் பேசி இருப்பதை வன்மையாகக் கண்டிப்பதோடு எந்தவொரு நிபந்தனையும் இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும் .

 

மத்திய மாநில அரசுகள் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் . பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பார்க்கவகுல மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளை தனித் தொகுதிகளை மாற்றி பொதுத் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

 

கல்வி வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பயன் பெறும் வகையில் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் பூர்வகுடிகளான பார்க்கவகுல மக்களின் குலதெயவ கோவில்களை எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுப்பது ஏற்புடையது அல்ல அரசு திரும்பப் பெற்று காணிக்காரர்களான பார்க்கவகுல உடையார் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பிறகு நடைபெற்ற கூட்டத்திற்கு அகில பாரத பார்வை குல சங்க தலைவர் திருமலை ரவி தலைமை தாங்கினார். ருசோ பேரவை தலைவர் கஸ்பர் வரவேற்றார்.தமிழக குடிமக்கள் கட்சி ராமகிருஷ்ணன்,

தமிழ்நாடு

பார்க்கவகுல பேரவை வக்கீல் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில்அகில பாரத பார்க்கவகுல சங்க நிர்வாகி ராஜேந்திரன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.