Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக எம்எல்ஏ பழனியாண்டியால் தாக்கப்பட்ட நிருபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் .

0

'- Advertisement -

அராஜக திமுக.

 

கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள் .

 

திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் அராஜக போக்கினால்,

 

கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக இயங்கி வரும் கல் குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி திருச்சி மாவட்ட தலைமை செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,

பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களை, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் தன்சிங், தில்லைநகர் பகுதி செயலாளர் கருப்பையா, கல்நாயக் சதீஷ்குமார், நிர்வாகிகள் அகிலாண்டேஸ்வரி, சேது கார்த்தி, ராஜா மணிகண்டன், கருணாநிதி, கைலாஷ் ராகவேந்திரா ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.