Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோர்ட்டில் 2014 ம் ஆண்டு முடிந்த வழக்கிற்கு விசாரணை என்று கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் திருச்சி முன்னாள் கோட்டத் தலைவர் உடல் நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதி.

0

'- Advertisement -

திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி விட்டு வருகிறார் என்ற தகவல் பேரில் அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.இது குறித்து அப்போதைய அதிமுக கோட்டத் தலைவர் ஞானசேகருக்கு தகவல் அளித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.அப்போது கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஜ யாக பணியாற்றிய ராக்கெட் ராஜா என்ற காவலரின் மனைவிதான் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டது என தெரிய வந்தது.

சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வந்ததும் அந்த பெண்ணின் கணவர் அதே ராக்கெட் ராஜா தான்.

 

வேண்டுமென்றே பொய் புகார் கூறுகிறார்கள் என கோட்டத் தலைவர் ஞானசேகர் உள்ளிட்ட மூன்று பேர் மீது ராக்கெட் ராஜா பொய் புகார் அளித்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.போலீசார் நடத்திய விசாரணையில் ராக்கெட் ராஜா மனைவி திருடியது அம்பலமானது அதற்கு காவலர் ராக்கெட் ராஜா உறுதுணையாக இருந்தது தெரிய வந்தது வந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

பின்னர் பணியில்லாமல் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன் என் மீது உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய உதவுங்கள் என உதவி ஆய்வாளர் ராக்கெட் ராஜா கேட்டுக் கொண்டதின் பேரில் 2014 ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராக்கெட் ராஜா மீதான வழக்குகளை சுவாஷ் , (தள்ளுபடி செய்யப்பட்டது)இதேபோன்று ஞானசேகர் உள்ளிட்டோர் மீதான வழக்குகளும் அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பணியில் சேர்ந்து தற்போது ஓய்வு பெற்றுவிட்டார் ராக்கெட்ராஜா என கூறினார்.

இந்த நிலையில் வழக்கு தள்ளுபடி ஆகி பத்து ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்று அதிமுக முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகரை கன்டோன்மெண்ட் காவல் நிலைய ஆய்வாளர் அன்பழகன் தொலைபேசியில் உங்கள் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது காவல் நிலையம் வாருங்கள் என அழைத்ததன் பேரில் காவல் நிலையம் சென்றார் ஞானசேகர்.அங்கே இன்ஸ்பெக்டர் இல்லை.அவரை ஒரு அறையில் அமர கூறினார்.பின்னர் கேட்டபோது 2014இல் உங்கள் மீது ஒரு கேஸ் உள்ளது உங்களை இன்ஸ்பெக்டர் அமர சொல்லி உள்ளார் என காவலர்கள் கூறியுள்ளனர்.

தகவல் அறிந்து ஞானசேகரின் வழக்கறிஞர்கள் பொன்முருகன்,தினேஷ் பாபு,கார்த்தி

உள்ளிட்டோர் காவல் நிலையம் விரைந்து சென்று 2014 இல் தள்ளுபடி ஆன வழக்கு இது என எடுத்துக் கூறிய ஞானசேகரை அதே அறையில் பல மணி நேரம் காக்க வைத்துள்ளனர் போலீசார் .

பின்னர் ஸ்குவாஸ் (தள்ளுபடி) செய்யப்பட்ட காப்பி மற்றும் முன்ஜாமின் காபியை காவல் நிலையத்தில் கொடுத்த பின்பு ஞானசேகர் இடம் கடிதம் ஒன்றை எழுதி வாங்கிக்கொண்டு மீண்டும் இன்ஸ்பெக்டர் வரை அதை அறையில் அமர சொல்லி உள்ளனர் காவல் துறையினர்.

பின்னர் சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் வராமலேயே அவரை வெளியில் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையம் வெளியில் வந்த ஞானசேகர் நிருபர்களிடம் கூறிய போது :-

2014 இல் முடிந்த வழக்கு சம்பந்தமாக இன்று விசாரிக்க காவல் நிலைய வரச் சொல்லி தற்போது வரை என்னை இங்கு அமர் வைத்திருந்தனர்.

இயற்கை உபாதைகளை கூட வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.தற்போது கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்தேன் சுகர், பிரஷர் உள்ள என்னை எதற்காக பெரிய கொலை குற்றவாளி போன்று இவ்வளவு நேரம் காக்க வைத்தனர் என்பது தெரியவில்லை.

நாங்கள் வழக்கை தள்ளுபடி செய்ததால் ஒருவர் மீண்டும் காவல்துறையில் சேர்ந்து உள்ளார் .அவர் தகுந்த கோர்ட் நகல்களை தராமல் பணியில் உள்ளார் சேர்ந்து இருப்பாரா?

எங்கள் மீதான கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி செய்ததற்கான நகல்கள் அப்போதே காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்திருக்கும்.அல்லது கோர்ட் ஏட்டு சென்று வாங்கி இருக்க வேண்டும்.இது காவல்துறையின் பணி.அதை விடுத்து பல மணி நேரம் என்னை இங்கு காக்க வைத்ததால் உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளது எனக் கூறி உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் அவரது வழக்கறிஞர் எங்களை தொடர்பு கொண்டு பேசிய போது காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த ஞானசேகர் அவர்களுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது,இதனால் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம் என கூறினார்.

முன்னாள் அதிமுக கோட்டத் தலைவர் மற்றும் திருச்சி மாநகர் ஓட்டுநர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை காவல் நிலையத்தில் குற்றவாளி போன்று பல மணி நேரம் காக்க வைத்து அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்து அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.