Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை அமித்ஷா – எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு. முக்கிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு.சூடுபிடிக்க தொடங்கிய தமிழக அரசியல் களம்.

0

'- Advertisement -

திருச்சியில் நாளை அமித்ஷா – எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு. முக்கிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு.

தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் பொதுமக்களை சந்தித்து பரப்புரை மூலம் தங்கள் கொள்கைகளை விளக்கி ஆதரவு திரட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்,

 

இது ஒருபுறம் இருக்க. மற்றொரு புறம் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்சமயம் வரை தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், பாஜக அதிமுக கூட்டணியில் தேசிய ஜனநாயக கூட்டணியும்,நாம் தமிழர் கட்சி தனியாகவும்,விஜயின் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக, பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகளை சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக

பாஜக தங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுகவிற்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணியில் தொடர்ந்து பாஜக மேலிடம் ஈடுபட்டு வருகிறது.

 

இந்நிலையில் பாஜக தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்தல் குழு அமைத்துள்ளது.அந்த குழு விரைவில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

 

தற்போது தமிழ்நாடு தேர்தல் மீது பாஜக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில்

தமிழ்நாட்டை குறி வைத்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தான் மத்திய மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று மாலை தமிழகம் வந்துள்ளார்.அந்தமான் நிக்கோபாரில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை புரிந்து அதன் பிறகு மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் தமிழர் பயணம் நிறைவு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி விட்டு மீண்டும் திருச்சி வந்து தனியார் ஹோட்டலில் ஓய்வு எடுக்கிறார். பிறகு நாளை காலை 10 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்கு வருகை தர உள்ளார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு சிறிது நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச உள்ளனர். அப்பொழுது

அமித்ஷாவுடன் சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமியிடம் மத்திய மந்திரி அமித்ஷா தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்பதை கேட்பார் என்றும்,தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சு வார்த்தையை எடப்பாடி பழனிச்சாமியிடம் நடத்துவார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

புதுக்கோட்டையில் இன்று மாலை நடைபெறும் தமிழன் பயணம் பொதுக்கூட்டம் நிறைவு விழா வருகிற ஒன்பதாம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது

இந்நிலையில் தேதி மாற்றப்பட்டு இன்று 4ந் தேதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் தேதி மாற்றப்பட்டதால் அவர் இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக நிறைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை நிலவி உள்ளது.இன்றைய நாளில் அவர் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனால் அவரால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. இதனால் புதுக்கோட்டை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொள்வார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்துஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் தனது பிரச்சார பயணத்தை முடித்துக் கொண்டு இரவு திருச்சி வருகை புரிய உள்ளார். பிறகு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்து விட்டு நாளை 5ந்தேதி திங்கட்கிழமை காலையில் மத்திய மந்திரி அமித்ஷா தங்கியிருக்கும் தனியார் ஓட்டலுக்கு சென்று அவரை சந்தித்து பேச்சுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அரசியல் களம் சூடு பிடித்து இருக்கும் நிலையில் அமித்ஷா தமிழகம் வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் நாளை மத்திய மந்திரி அமித்ஷா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.