Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாஜகவை நினைத்து தூக்கம் இல்லாமல் இருப்பதுடன், மீண்டும் ஆட்சிக்கு வருவோமா என்ற அச்சத்துடன் உள்ளார் மு.க.ஸ்டாலின்.திருச்சியில் கருப்பு முருகானந்தம்.

0

'- Advertisement -

எடப்பாடி, நயினார் சுற்றுப்பயணம் திமுக கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது:

Ad banner

நிச்சயம் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

பொங்கலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைகிறது.

திருச்சியில் கருப்பு முருகானந்தம் பேட்டி.

 

திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் பொங்கல் விழா வருகின்ற 5 – ந் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான கால்கோல் விழா இன்று காலை நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட

பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

பாஜக மாநில தலைவர்

நயினார் நாகேந்திரன் திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்பதற்காகவும், பல்வேறு காரணங்களால் தலைகுனிந்துள்ள தமிழகத்தை, தலை நிமிர்ந்து விட செய்வதற்காகவும் பரப்புரை பயணத்தை துவங்கி 52 மாவட்டங்களில் பயணத்தை நிறைவு செய்துள்ளார். 54ஆவது மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மாலை 4 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் நிறைவுவிழா பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

உள்துறை அமைச்சரின் பயணம் தமிழகத்தில் நடைபெறுகிறது என்றாலே ஒரு மிகப்பெரிய அரசியல் எதிர்பார்ப்பு நாடுமுழுவதும் பற்றிக்கொள்வது இயல்பானது, அதேபோன்று தற்போது அமித்ஷாவின் வருகை திமுகவின் ஆட்சி தமிழகத்தில் அகற்றப்படும் என்ற உத்தரவாதத்தை கொடுக்கக்கூடியவகையில் இந்தபயணம் அமைய வேண்டும் என்று விரும்புகிறோம்.

அந்த நிறைவு நிகழ்ச்சிக்கு பிறகு மறுநாள் காலை மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் தமிழகத்தின் கலாச்சாரமாக இருக்கக்கூடிய பொங்கல் விழாவை 2000 பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடும் நிகழ்வு நடைபெற உள்ளது, அதற்கான முகூர்த்த கால் நடும் வைபவம் தற்போது நடந்துள்ளது.

நிச்சயமாக உள்துறை அமைச்சரின் 4ம் தேதி மற்றும் 5ம் தேதி பயணம் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என்ற உத்தரவாதத்தை அளிக்கக்கூடிய பயணமாக அமையும். 5ம் தேதி பாஜக உயர்மட்டகுழு மற்றும் மையக் குழு கூட்டம் நடக்கிறது.தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்து அவரது வழிகாட்டுதல்களை அளிக்க உள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை. அன்றைய தினம் சேலத்தில் சுற்றுப்பயணம் இருப்பதால் தேதி மாற்றமுடியாது, இது பாஜகவின் நிகழ்ச்சியாகவே இருக்கும். அதன்பிறகு யாத்திரை நிறைவு பெறாத மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களாக நடத்துவது என திட்டமிட்டுள்ளதாகவும், அதேநேரம் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் நிறைவு பெற்ற பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் மிகப்பெரிய அளவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடமாட்டோம் என்ற சொல்லக்கூடிய பாஜகவை பார்த்துதான் திமுகவில் உள்ள அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது பாஜக என்ன செய்யப் போகிறது, என்ன திட்டத்தை வகுக்க போகிறது என்ற எண்ணத்தில் முதல்வருக்கு தூக்கம் இல்லாமல் இருப்பதுடன், மீண்டும் ஆட்சிக்கு வருவோமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரது சுற்றுப்பயணம் தற்போதைய திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என எண்ணினால் அரசியல் வியூகம் அமைப்பதில் பாஜகவுக்கு ஈடுஇணை இல்லை, பீகாரில் மற்றும் மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட சூழ்நிலையை தேசிய ஜனநாயக கூட்டணி பெறும், அதன்பிறகு திமுக இல்லாத நிலையை தமிழகத்தில் ஏற்படுத்துவோம், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் அதிக சீட்டு கேட்கும் பிரச்சனை திமுகவில்தான் நிலவுகிறது, எங்களது கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை பொங்கலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையக்கூடியசூழல் உள்ளது, நிச்சயம் மிகப்பெரிய கூட்டணியாக மற்றும் ஆட்சியமைக்ககூடிய கூட்டணியாக அமையும். ஒரு பிரச்சனைக்கு மாற்றாக புதிய பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வேலை தினசரி நிகழக்கூடிய நிகழ்வுகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் க இருக்கிறார்கள். நிச்சயம் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் ஒண்டி முத்து மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.