Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.

0

'- Advertisement -

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் இருக்கும் நிலையில்

Ad banner

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு

விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி’

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைக்காய் மண்டி உள்ளது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சியாக காணப்பட்டது. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் பெரும் கவலையில் இருந்து வந்தனர். இதனால் வியாபாரிகள் லாபகரமான விலைக்கு வாழை தாரயை விற்க முடியாமல் பாதிப்பு அடைந்து வந்தனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வாழைத்தாரின் விலை திடீரென்று உயர்ந்து உள்ளது.

 

செவ்வாழை ரூ300 ல் இருந்து ரூ800 க்கும் விற்பனையானது. தற்பொழுது ரூ400 முதல் 1400 க்கு விற்கப்படுகிறது. ரஸ்தாழி ரூ 100 முதல் 400க்கு விற்கப்பட்டது. தற்பொழுது ரூபாய் 200 முதல் 800க்கு விற்கப்படுகிறது. கற்பூரவள்ளி 50 முதல் 400க்கு விற்கப்பட்டது. தற்பொழுது ரூ 100 முதல் 600 வரை வைக்கப்படுகிறது பூவம்பழம் 100 முதல் 650 விற்கப்பட்டது தற்பொழுது 200 முதல் 850 வரை விற்கப்படுகிறது.

 

இதுகுறித்து காந்தி மார்க்கெட் வாழைக்காய் கனி வியாபாரிகள் சங்க தலைவர் கே.பி.டி பழனிவேல் கூறும் பொழுது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் இருக்கும் நிலையில் வாழத்தார் விலை அதிகரித்து உள்ளது.இது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் பொழுது மேலும் அதிகரிக்கும் பொதுவாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் நன்றாக நடைபெறும் என்பதற்காக அதிக அளவில் விளைச்சல் செய்யப்பட்டு வாழைத்தார்கள் வியாபாரம் செய்வது வழக்கம்.ஆனால் இந்த முறை பொங்கலுக்கு 14 நாட்களுக்கு முன்பே விலை உயர்ந்து உள்ளது.காந்தி மார்க்கெட்டில்

வாழைகாய் மண்டியில் பொங்கல் நெருங்கி வரும் வேளையில் வியாபாரம் சூடு பிடித்து . எனவே காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பைகளை தினந்தோறும் அள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

வாழைத்தார் திடீர் விலை உயர்வால் வியாபாரிகள்,வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.