Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாற்றும் நிகழ்ச்சி. பக்தர்கள் இப்போதே முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது .

0

'- Advertisement -

வரும் டிச.19-ந் தேதி அன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி

Ad banner

கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாற்றும் நிகழ்ச்சி.

அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சி, கல்லுக்குழியில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் உலக நன்மைக்காக ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றும் விழா வருகின்றார் டிசம்பர் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது.

TVK ad

இவ் விழாவினை முன்னிட்டு 19ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், காலை 7 மணி முதல் தொடர்ந்து ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றுதல் விழாவும், இரவு 9 மணிக்கு மேல் ஆஞ்சநேய சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

 

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செ.செ.சரண்யா, தக்கார் ச.வினோத்குமார் ஆகியோருடன் இணைந்து கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 

விழாவில் வடை மாலை சாற்ற விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரங்களை குறிப்பிட்டு முன்பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.