தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் சங்கத்தின் மாநில தலைவர் கு. முனுசாமி தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 11 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன ,அவை கீழ் வருமாறு :-
1. புதிதாக சில சாதிகளை பல்வேறு சாதி பிரிவுகளில் இருந்து பழங்குடியினர் சாதி பட்டியலில் இணைத்துள்ளதால் பழங்குடியினர் மக்கள் தொகையின் அடிப்படையில் புதியதாக சேர்த்த சாதிப் பிரிவினருக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு சதவீதத்தை குழு ஒதுக்கீடு செய்து பழங்குடியின மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை பழங்குடியின மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்.
2. படிப்பறிவில்லாத பழங்குடியின பெற்றோருக்கு சாதி சான்றிதழ் இல்லாத நிலையில் ரத்த சம்பந்தமான உறவினர்களின் சாதி சான்றிதழ்களின் அடிப்படையில் உறுதிமொழி பெற்று பழங்குடியின குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும்
3. படிப்பறிவில்லாத பழங்குடியின பெற்றோர்களுக்கு ஆவணங்கள் இல்லாத நிலையில் சாதி சான்றிதழ் மறுக்காமல் எங்கள் பழங்குடி மக்களின் பேசும் மொழி குலதெய்வ வழிபாடு குலப் பிரிவுகள் பழங்குடியின கலாச்சார பழக்க வழக்கங்கள் பிறப்பு மற்றும் இறப்பு சடங்குகள் உணவு முறைகள் மற்றும் வாழ்வியல் முறைகள் போன்ற மானிடவியல் விவரங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு பழங்குடி என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் ,
4. மாநில சங்கத்தில் உறுப்பினர்களாக இணைவதற்கும் மற்றும் மாநில நிர்வாக குழு தேர்தலில் போட்டியிடுவதற்கும் தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட “காட்டு நாயக்கன் பழங்குடியின சாதி சான்றிதழ் நகல்” மற்றும்.”ஆதார் அட்டையின் நகல்” ஆகியவற்றை கட்டாயமாக சமாளிக்கப்பட சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
5. இறந்த உறுப்பினர்கள் கொடுக்கப்பட்ட முகவரியில் அடையாளம் காணப்படாத மற்றும் சாதி சான்றிதழ் இல்லாத உறுப்பினர்களை மாநில சங்க உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கு மாநில தலைவர் முனுசாமி தலைமையிலான மாநில நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6. மாநிலத் தலைவர் 28 9 2025 ஐந்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்தும் கலந்தாய்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
7, சங்கத்தை பிளவு படுத்தி சமூக மக்களிடையே பிரிவினைவாதத்தை தோன்றிய நபர்களுக்கு எதிரான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலத் தலைவர் முனுசாமி தலைமை நல்ல மாநில குழுவிற்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8. சமூகமில்லாத நபர்களுக்கு அதிகாரத்தை பிரயோகம் செய்து சாதி சான்றிதழ் பெற்றுக் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டிய மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நமது சமூகத்தை சேர்ந்த நபர்கள் மீது அதன் உண்மை தன்மையினை அறிய சட்டையை மேற்கொள்ள மாநில தலைவர் முனுசாமி அவர்கள் தலைமையிலான குழு தீர்மானம் அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘
9. கடந்த 2006-2007. முதல் கோர்வை செய்யப்படாடல் பதிவாளர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள கோப்புகளை கோர்வை செய்வதற்கும் புதிய தேவையான சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில தலைவர் முனுசாமிக்கு முழு அதிகாரம் நிறைவேற்றப்பட்டது.
10. அரசுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பழங்குடியின மக்களுக்கு காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கும் கூத்தகையின் பெயரில் வழங்கி விவசாயம் சார்ந்த தொழில் தொடங்கி பழங்குடியின காட்டுநாயக்கன் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது .
11.பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களுக்கான நிதி முழுவதும் பழங்குடியின மக்களுக்கு உரிய காலத்திற்குள் சென்றடைவதை கண்காணிக்க தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காட்டுநாயக்கன் சமூக பட்டதாரிகளின் தலைமையில் பழங்குடியின நிதி கண்காணிப்பு குழுக்களை உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டனர் .

