இந்துக்களுக்கு உணவு கிடையாது.. நெற்றியில் குங்குமம் வைத்திருந்ததால் திருமண விழாவில் சாப்பிட அமர்ந்தவரை வெளியேற்றிய நபர்.
பெங்களூர் புறநகரில் நடந்த திருமண விழாவில் இந்து மதத்தை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர் நெற்றியில் குங்குமம் வைத்து பங்கேற்றார்.
அதன்பிறகு அவர் திருமண விருந்தில் பங்கேற்றார். அப்போது நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்த ஒருவர் அவருக்கு உணவு பரிமாற மறுத்ததோடு, வெளியேறும்படி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு புறநகரில் நெலமங்களா அருகே இஸ்லாம்புரா என்ற இடம் உள்ளது. இங்கு சமி உல்லா என்பவரின் குடும்பத்தில் திருமண விழா நடந்தது. சமி உல்லாவின் மகன் முஜாமில் பாஷா என்பவருக்கும், சானியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அதன்பிறகு அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
இந்த திருமண விழாவில் நெலமங்களாவை சேர்ந்த ராஜூ என்பவர் சென்றார். இவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது சலூன் கடையில் மணப்பெண் சானியாவின் உறவினர் முடித்திருத்தம் செய்வார். இதனால் திருமணத்துக்கு வரும்படி அவர் ராஜூவை அழைத்து இருந்தார். திருமணம் சிறப்பாக முடிந்த நிலையில் ராஜூ விருந்தில் பங்கேற்றார். அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலியில் ராஜூ அமர்ந்தார்.
ராஜூவை எடுத்து கொண்டாலும் எங்கே சென்றாலும் நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் திருமண விழாவுக்கும் அவர் நெற்றியில் குங்குமம் வைத்து சென்றிருந்தார். திருமண விழாவில் உணவு பரிமாறியபோது மணமகனின் தந்தை சமிஉல்லா, ராஜூவின் நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்தார்.
அவர் ராஜூவுக்கு உணவு பரிமாற மறுத்தார். அதுமட்டுமின்றி, ”நெற்றியில் குங்குமம் வைத்துள்ளீர்கள். உங்களை யார் திருமணத்துக்கு அழைத்தது. உங்களுக்கு எல்லாம் உணவு பரிமாற முடியாது. இந்துகளுக்கு நாங்கள் உணவு வழங்க மாட்டோம், இங்கிருந்து எழுந்து செல்லுங்கள்” என்று கூறினார். இதனால் பரபரப்பான சூழல் உருவானது.
இதையடுத்து அங்கிருந்த ஒருவர் சமி உல்லாவை கண்டித்தார். ”இதுபோன்று பேசக்கூடாது. விருந்து சாப்பிட உட்கார்ந்தவரை எழுந்திரி என்று சொல்வது தவறு. யாரும் அழைக்காமல் அவர் வந்திருப்பாரா? விழாவுக்கு வந்தவர்களை மனதார வரவேற்று வயிறு நிறைய விருந்து வைத்து அனுப்புவது தான் நல்லது. மாறாக சாப்பிட அமர்ந்தவரை எழுந்து செல்லும்படி கூறுவது சரியான போக்கு கிடையாது. இது மனதாபிமானமற்ற செயல்.
இது அதர்மம். நீங்கள் செய்வது ரொம்ப பெரிய தவறு. இப்படி யாராவது ஒருவரை தடுக்க வேண்டும் என்றால் கேட் அருகே நிற்க வேண்டும். போர்டு வைத்திருக்க வேண்டும். சாப்பிட உட்கார்ந்தவரை எழுந்திருக்க சொல்லக்கூடாது. புரிந்து கொள்ளுங்கள். மானம், மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள் ” என்று கண்டித்தார். இருப்பினும் ராஜூ திருமண விழாவில் சாப்பிடாமல் அவமானத்துடன் வெளியேறினார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அவரை சமி உல்லாவை கடுமையாக கண்டித்து வருகின்றனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட ராஜூ கூறுகையில், ”எனது கடைக்கு முடிவெட்ட வருபவரின் உறவுக்கார பெண்ணுக்கு திருமணம் நடந்தது. இதற்கு என்னை அழைத்தார். கட்டாயமாக வர வேண்டும் என்று கூறினார். நேரம் இருந்தால் வருகிறேன் என்று கூறியிருந்தேன். எனக்கு அன்று.ப்ரீ டைம் இருந்ததால் திருமண விழாவுக்கு சென்றேன்.
அப்போது சாப்பிட உட்கார்ந்தபோது ஒருவர் வந்து இந்துக்களுக்கு சாப்பாடு வழங்க மாட்டோம். உங்களை யார் அழைத்தது என்று கூறினார். இதனால் நான் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன். இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அது எனக்கு தெரியாது. சமுக வலைதளங்களில் பரவியபோது தான் அதனை நான் பார்த்தேன்” என்று கூறியுள்ளார்

