இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு திருச்சியில் கிறிஸ்தவர்கள்
முன்னோர்களுக்கு
மலர் அஞ்சலி
மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சியில் கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் அவர்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவர்.
அதன் ஒரு பகுதியாக. திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து
கிறிஸ்தவர்கள்
தங்களது முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து மலர் முலம் அலங்காரம் செய்து மெழுகுவர்த்தி பற்ற வைத்து பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு முன்னோர்களை நினைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும் முன்னோர்களை நினைத்து குடும்பத்தினர்.
உறவினர்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டனர்.
இதேபோன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம்,நீதிமன்றம் எதிரே உள்ள கல்லறை தோட்டம் உள்பட பல்வேறு கல்லறைத் தோட்டத்திலும் கிறிஸ்தவ மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்து பிரார்த்தனை செய்தனர்.
திருச்சி மேலபுத்தூர் பகுதியில் இரு சமூகத்தை சேர்ந்த கல்லறை தோட்டம் அருகே இருந்த காரணத்தால் எந்தவித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க மேலப் புதூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

