Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க திருச்சி மாவட்ட நீதிபதி அறிவுறுத்தல்.

0

'- Advertisement -

நேற்று 27/6/2025 வெள்ளிக்கிழமை மாலை திருச்சி புதிய நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மாதாந்திர ஆய்வு கூட்டம் மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது.

 

Ad banner

இந்த நிகழ்ச்சியில் ஐந்து வருடத்திற்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கை மற்றும் நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர முடியாத பிடியானை ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து நீதிபதிகளுக்கும், நேரிலும் காணொளி மூலமாகவும் மற்றும் அதிகாரிகளுக்கு மாண்புமிகு மாவட்ட நீதிபதி அறிவுறுத்தினார்.

 

நிகழ்ச்சியில் மாண்புமிகு நீதிபதிகள் சுவாமிநாதன், சரவணன், கார்த்திகா, நசீர் அலி, கண்ணன், அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, மோகன் காவல்துறை உதவி ஆணையர்கள் யாஸ்மின் பானு, ரங்கசாமி, கதிரவன் மாவட்ட ஆட்சியாளர் அலுவலக உதவியாளர், மாவட்ட நில அளவை உதவியாளர் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் கணேசன், குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.