Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே என் நேரு பதில்.

0

'- Advertisement -

திமுக கூட்டணி கட்சிகளை இழுக்க மத்திய அமைச்சர்

Ad banner

எல்.முருகன் நூல் விடுகிறார்:

அதிமுக கூட்டணியில் இருந்து எங்களோடு இணைய பலர் காத்திருக்கிறார்கள்

 

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

 

 

திமுக கூட்டணி கட்சிகளை இழுக்க மத்திய அமைச்சர்

எல்.முருகன் நூல் விடுகிறார்.

அதிமுக கூட்டணியில் இருந்து எங்களோடு

இணைய பலர் காத்திருக்கிறார்கள்.

என்று

நகர்புற வளர்ச்சித்

துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

 

திருச்சி , கிராப்பட்டி மற்றும்

கே.கே. நகரில் மங்கம்மாள் சாலையில் மாநகராட்சி பகுதி பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா அமைச்சர்

கே .என் .நேரு தலைமையில் நடைபெற்றது.தொடர்ந்து திருச்சி கிராப்பட்டியில் மாநகராட்சி பகுதி பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் விழா அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

 

 

இதில் அமைச்சர் கே.என்.நேரு பட்டாக்களை

பயனாளிகளுக்கு

வழங்கி உரையாற்றினார்.

இந்த விழாவில் கலெக்டர் பிரதீப் குமார்,மாநகராட்சி மேயர் அன்பழகன்,திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி,மாநகராட்சி ஆணையர் சரவணன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் துர்கா தேவி,கவுன்சிலர்கள் கவிதா செல்வம் பகுதி செயலாளர் மோகன்தாஸ் மற்றும் திரளான நிர்வாகிகள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்,

கே. என் .நேரு கூறியதாவது:-

 

தமிழகம் முழுவதும் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கக்கோரி

மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்களை ஏற்று தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு

பட்டாக்கள் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும்

56,000 இலவச பட்டாக்கள் வழங்கப்

பட்டுள்ளது.

TVK ad

மேலும் பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட தண்ணீர் கடை மடை வரை தங்கு தடையின்றி

செல்ல தூர் வாரும் பணிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம்,

பெட்டவாய்த் தலையில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை.

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மணல் கலந்து வந்தது அதுவும்

உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது என்றார்.

பின்னர்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் திட்டங்களை அமைச்சராகிய நீங்கள் (கே.என்.நேரு ) உங்கள் தொகுதிக்கு மாற்றிக் கொள்வதாக ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி குற்றச்சாட்டியுள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.என். நேரு,

அவர் கூறுவதில் உண்மை இல்லை .அவர் சொல்வது போல

திட்டங்களை மாற்ற முடியாது என்றார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள்

அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணிக்கு வரும் என

பாஜக அமைச்சர்

எல் .முருகன்

கூறியுள்ளாரே?

என செய்தியாளர்கள்கேட்டதற்கு,

அதிமுக கூட்டணியில் இருந்து எங்களோடு

இணைய பலர் காத்திருக்கிறார்கள்.

இதுவரை அவர்களால் (அதிமுக)

தங்கள் கூட்டணியை உறுதிப்படுத்த முடியவில்லை.

எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை இணைக்கும் முயற்சியில் எல். முருகன் ஈடுபடுகிறார் .

அவரது எண்ணம் நிறைவேறாது என்றார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றனரே ?

என்ற கேள்விக்கு இதனை எங்கள் தலைவர் (ஸ்டாலின்)

பார்த்துக் கொள்வார் .

இது குறித்து தான் கருத்து கூற முடியாது என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.