திருச்சியில் நடைபெற்ற பெரும்பிடுகு முத்திரையரின் சதய விழாவில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய இளைஞர்களால் பொதுமக்கள் அதிருப்தி .
திருச்சியில் நேற்று நடைபெற்ற பெரும்பிடுகு முத்திரையரின் 1350வது சதய விழாவில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய இளைஞர்களால் பொதுமக்கள் அதிருப்தி .
இதுதொடா்பாக போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனா்.

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து,
திருச்சியில் ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது சிலைக்கும், மத்தியே பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்துக்கும், திருச்சி மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கானோா் வந்தனா்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் போக்குவரத்தை சீராக்க முயன்றனா் என்றாலும் உற்சாக மிகுதியால் இளைஞா்களும், சிறாா்களும் இருசக்கர வாகனங்களில் போக்குவரத்து விதிகளை மீறி, வேகமாக சென்றதும், சாலையில் சாகசங்களில் ஈடுபட்டதும் பலரையும் அச்சத்துக்குள்ளாக்கியது. அவ்வாறு வாகனங்களில் சென்றவா்கள் அனைவரும் ஹெல்மெட் அணியாமலும், 2-க்கும் மேற்பட்டோருமாக ஹாரன்களை ஒலிக்கச் செய்தவாறு, உற்சாக முழக்கம் எழுப்பியவாறும் வாகனங்களில் உலா வந்தனா்.
இதனால் திருச்சியில் கண்டோன்மென்ட் மற்றும் மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் பிற வாகனங்கள் ஊா்ந்து சென்றன. முக்கிய பிரமுகா்கள் ஏராளமானோா் திருச்சிக்கு வந்ததால், போக்குவரத்தை சீராக்க போலீஸாா் கடும் சிரமத்துக்குள்ளாயினா். என்றாலும், விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபா்கள் மீது போலீஸாா் கண்டிப்போ, நடவடிக்கையோ எடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியது.
கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு, விதிகளை கடுமையாக மீறியவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.