திருச்சியில் டிடிவி தினகரனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றக் கூறிய போலீசார். அமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.
திருச்சியில் டிடிவி தினகரனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற போலீசார் திடீர் உத்தரவு
திருச்சியில் தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருச்சி வந்தார்.திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 ஆவது சதய விழாவில் கலந்துகொண்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.

.இன்று மாலை அதே நட்சத்திர ஓட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.
அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இன்று காலையில் இதற்காக மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள பழைய சங்கம் ஹோட்டலில் தங்கி உள்ளார்.அவரை வரவேற்று அந்த ஓட்டல் முன்பு கலெக்டர் அலுவலக சாலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்பு பேனர்கள் அமைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று திடீரென்று கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் பழைய சங்கம் ஓட்டல் ஓட்டல் முன்பு டிடிவி தினகரனை வரவேற்று இருந்த டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் என்று அமமுக நிர்வாகிகளியிடம் போலீசார் கூறியுள்ளனர். அதற்கு அமமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் தலைமையில் நிர்வாகிகள் தன் சிங்,வேதாத்திரி நகர் பாலு,உறையூர் கல்நாயக் சதீஷ்,உமாபதி, தருண்,கல்லணை குணா,பிரகாஷ் உள்பட ஏராளமான அமமுக நிர்வாகிகள் ஓட்டல் முன்பு திரண்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பிறகு போலீசாரின் அறிவுரைப்படி நிகழ்ச்சி முடிந்த ஒரே ஒரு பிளக்ஸ் பேனரை மட்டும் அமமுகவினர் அகற்றினர்.
இது இவ்வாறு இருக்க திருச்சி மாநகரம் முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் ஜூன் 3ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆளுங்கட்சி என்பதால் வைத்துள்ள பிளக்ஸ் பேனர்களை போலீசார் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மட்டுமல்ல தமிழக முழுவதும் ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்பும் இரண்டு நாட்கள் பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது .