லாரி புக்கிங் அலுவலகத்தை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை. திருச்சி சஞ்சீவி நகரில் நடந்த துணிகர சம்பவம் .
லாரி புக்கிங் அலுவலகத்தை உடைத்து பணம் கொள்ளை. திருச்சி சஞ்சீவி நகரில் நடந்த துணிகர சம்பவம் .

திருச்சி அரியமங்கலம் கூவளக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேவியர்(வயது 46). இவர் சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி நகர் பகுதியில் லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 21 ஆம் தேதி தனது அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார் பின்னர் நேற்று காலை அலுவலகத்தை திறக்க வந்துள்ளார் அப்போது கடையின் முன்பக்க ஷட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.50,000 திருட்டு போனது தெரிய வந்தது. இதை அடுத்து சேவியர் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.