திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் நடந்து சென்றவர்
உட்பட2 பேர் பலி.
போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் சம்பவத்தன்று பாரதியார் சாலை பகுதியில் ரோட்டை கடக்க முயன்றால் அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளில் அடிபட்டு சாலை ஓரத்தில் விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செய்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முருகேசன் இருந்தார் இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் திம்மராயசமுத்திரம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 45). இவர் சம்பவத்தன்று ஸ்ரீரங்கம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒய் ரோடு சந்திப்பு பகுதியில் தனது புல்லட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது இடது பக்கத்தில் இருந்து வந்த அரசு பஸ் ஒன்று இவர் மீது மோதியது இதில் அவர் சாலையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.