Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் 45 நாட்கள் நடைபெற உள்ள அரசு பொருட்காட்சியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார் .

0

'- Advertisement -

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் 45 நாட்கள் நடைபெற உள்ள அரசு பொருட்காட்சியை அமைச்சர் கே..என்.நேரு தொடங்கி வைத்தார்.

 

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பிரமாண்ட அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இப்பொருட்காட்சியின் திறப்பு விழா, நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, அரங்குகளை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

 

இந்த பொருட்காட்சியில், 27 அரசுத் துறைகளின் சாா்பிலான அரங்குகள், 5 அரசு சாா்பு நிறுவனங்களின் அரங்குகள் என மொத்தம் 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் அவா்களின் துறை சாா்ந்த திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்க பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

 

Suresh

மேலும், குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு சாதனங்கள், நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள், மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 

தொடக்க விழா நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலா் ர.ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி, செய்தித்துறை இணை இயக்குநா் (நினைவகங்கள்) கு.தமிழ்செல்வராஜன், நகரப் பொறியாளா் சிவபாதம், அரசுத் துறை உயா் அலுவலா்கள், மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

நாள்தோறும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.10ம் கட்டணம் வசூல் செய்யப்பட இருக்கிறது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.