பல நூறு கோடி செலவு செய்து பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் கட்டி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் 4 கிலோமீட்டர் வரை கும்மிருட்டில் பைபாஸ் சாலை . நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர். வழக்கறிஞர் கிஷோர் குமார் .
திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மன்னார்புரம் – பஞ்சப்பூர் கும்மிருட்டு தேசிய நெடுஞ்சாலை.
பல நூறு கோடி செலவு செய்து பஞ்சப்பூரில் தமிழக அரசு விமானநிலையமா இல்லை பேருந்து நிலையமா என பிரம்மிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தை சமிபத்தில் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும் மேற்படி முனையம் சில நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் திருச்சி மாநகரிலிருந்து புதிய பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு மன்னார்புரம் வழியாக இரவு நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. ஏனெனில் இந்த தேசிய நெடுஞ்சாலை வழி தடத்தில் சுமார் நான்கு கிலோ மீட்டர் வரை ஒரு விளக்கு கூட இல்லை. இதன் காரணமாக இப்பகுதியில் சமுகவிரோத செயல்களும், விபத்துகளும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே மன்னார்புரம் பகுதியில் ஒரு ஹைமாஸ் விளக்கை திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் நிதியிலிருந்து அமைத்துதர மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.
எனவே திருச்சி மாவட்ட நிர்வாகம் பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் உடனடியாக கலந்து பேசி திருச்சி மன்னார்புரம் பகுதியில் ஒரு ஹைமாஸ் விளக்கு மற்றும் புதிய பேருந்து முனையம் வரை நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விளக்குகளை அமைக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கேட்டுகொள்கிறோம்.
வக்கீல்.S.R.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியுள்ளார் .
செல்:98659 62927.