திமுகவினருக்கு என்னை இரையாக்க முயற்சி. திமுக பிரமுகர் குறித்து அதிமுக எம்எல்ஏவிடம் கல்லூரி மாணவி கண்ணீர் புகார்.
திமுகவினருக்கு என்னை இரையாக்க முயற்சி. திமுக பிரமுகர் குறித்து அதிமுக எம்எல்ஏவிடம் கல்லூரி மாணவி கண்ணீர் புகார்.
அரக்கோணம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த 10ஆம் தேதி அரக்கோணம் பகுதியில் இபிஎஸ் பிறந்தநாள் விழா நடந்தது.
அதில் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏ ரவி பங்கேற்றார். அப்போது எம்எல்ஏ ரவியை நடுரோட்டில் சந்தித்த மாணவி, தனக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என கண்ணீர் சிந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அந்த பெண் கொடுத்த மனுவில், அரக்கோணம் காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வசாயல் என்பவர் திமுகவில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார் என்றும், ஏற்கனவே திருமணமான நிலையல், தன்னை காதலிப்பதாக ஏமாற்றி கடந்த ஜனவரி 31ஆம் தேதி என்னை இரண்டாம் தரமாக திருமணம் செய்து கொண்டார்.

2 மாதம் சுமூகமாக சென்ற திருமண வாழ்க்கையில் திடீரென திமுக பிரமுகர்களுக்கு என்னை இரையாக்க தெய்வசாயல் முயற்சி செய்தார். நான் எதிர்ப்பு தெரிவிதததால், தினமும் என்னை கடுமையாக தாக்கினார். இதனால் மனஉளைச்சலில் தற்கொலை செய்த முயற்சி எடுத்ததேன்.
என்னை மீட்ட உறவினர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனயில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்தனர். ஆனால் தற்கொலை முயற்சி குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மேலும் தொடர்ந்து அவர் என்னை அழைத்து செல்ல வந்தார், வரவில்லை என்றால் பெற்றோர்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டி அழைத்து சென்றார். தற்போது நிரந்தரமாக தாய் வீட்டுக்கு வந்து என்னுடைய கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறேன், ஆனால் தெய்வசாயல் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், புகார் அளிக்க சென்றால் இது எங்களுடைய எல்லை இல்லை என அரக்கோணம் காவல்துறையினர் என்னை திருப்பி அனுப்பினர்.
தொடாந்து அரக்கோணம் தாலுகா காவல் நிலையம் சென்றேன், அங்கும் அலைக்கழிக்கப்பட்டதால் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தேன். அங்கும் என்னை அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். எங்குமே என் புகாரை எடுக்கவில்லை என குமுறி அழுதார்.
மேலும் என்னை தினமும் உடம்பெல்லாம் கடிச்சி வைக்கிறார், அடிக்கிறான் என கையில் இருந்த காயங்களை காட்டி அழுதார். இதையடுத்து மாணவிக்க ஆதரவாக இருப்பதாக அரக்கோணம் எம்எல்ஏ உறுதியளித்தார். இதையடுத்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தெய்வசாயல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .