திருச்சி திருவெறும்பூரில் எடப்பாடியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமை மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார் .
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தேவராயநேரியில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்று மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி.டி.எம்.அருண்நேரு செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி, ஒன்றிய செயலாளர்கள் ராவணன், SKD.கார்த்திக், புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் எஸ்.ராஜமணிகண்டன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எஸ்.பி.கணேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.