Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய மாவட்ட செயலாளராக சதீஷ்குமார் நியமனம்.

0

'- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சிக் கட்டமைப்பை விரிவுபடுத்திச் சீரமைக்கும் பணியில் புதிதாக 26 நிர்வாகிகளின் நியமனப் பட்டியலை மநீம கட்சித் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார் . ஜனநாயகப்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி அமைப்பு மற்றும் அனைத்துச் சார்பு அணிகளையும் அரவணைத்துச் செயல்பட்டு மாவட்டத்தில் கட்சியினை வளர்க்குமாறும், எப்போதும்போல் நீங்கள் அனைவரும் கட்சிப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படும் புதிய நிர்வாகிகளுடன் இணைந்து செயலாற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள். உங்களுக்கு மிகப்பெரிய பணி காத்திருக்கிறது எனவும் கூறியுள்ளார் .

 

இந்த 26 நிர்வாகிகளில் திருச்சி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் இருந்த சதீஷ்குமார் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் .

 

மக்கள் நீதி மய்ய கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சதீஷ்குமாரை கட்சியின் துணைத் தலைவர் , மண்டல செயலாளர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.