Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உணவு ஊட்டிய போது மூச்சு திணறி 3 வயது குழந்தை பரிதாப பலி

0

'- Advertisement -

திருச்சியில் மூன்று வயது ஆண் குழந்தை உணவு ஊட்டியபோது, மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Ad banner

திருச்சி மாவட்டம் பகவதிபுரத்தைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் (வயது 35), தாரணி (வயது 30). இவர்களது 3 வயது மகன் சைலேஷ். தற்போது கர்ப்பமாக உள்ள தாரணி பிரசவத்திற்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

கணவர் கார்த்திக் அவரின் உடன் இருந்து கவனித்து வந்துள்ளார். இதன் காரணமாக தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் குழந்தை சைலேஷ் இருந்துள்ளது.

 

TVK ad

இந்நிலையில், கார்த்திக்கின் தங்கை குழந்தைக்கு உணவு ஊட்டியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூற அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து திருவெறும்பூர் காவல் நிலைய  போலீசார்  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

உணவு ஊட்டியபோது குழந்தை மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.