பதவி ஏற்ற நாள் முதல் முடிந்த மற்றும் நடைபெற்று வரும் பணிகளுக்கான கமிஷன் தொகை உடனே வர வேண்டும். திருச்சி அரியமங்கலம் மண்டல் தலைவர் ஜெய நிர்மலா. அதிகாரிகள் புலம்பல்.
கிறிஸ்தவ நல்லனக்கஇயக்க திருச்சி மாவட்ட தலைவர் புஷ்பராஜ் இவரது மனைவி தான் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் மண்டல் தலைவர் ஜெய நிர்மலா.
அரசியல் என்றால் என்னவென்று அடிப்படை சுவடு கூட தெரியாத குடும்பத் தலைவியை இந்த பொறுப்புக்கு கொண்டு வந்தவர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜ் .
தனது கிழக்குத் தொகுதியில் உள்ள அரியமங்கலம் மண்டலத்தில் தனக்கு வேண்டிய கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தை சேர்ந்தவரை மண்டல் தலைவராக்க வேண்டும் என கொட்டப்பட்டு தர்மராஜ்க்கு கிடைக்க வேண்டிய மண்டல் தலைவர் பதவியை புஷ்பராஜின் மனைவி குடும்பத் தலைவி ஜெய நிர்மலாவுக்கு பெற்று தந்தார்..( இவர் பதவி ஏற்ற போது திமுக அடிப்படைத் தொண்டர் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது ).
திடீர் அதிர்ஷ்டத்தால் வந்த பதவியை வைத்துக் கொண்டு தான் வெற்றி பெற்ற 32 வது வார்டு பொதுமக்களுக்கு கூட எதுவும் செய்யாதவர் ஜெய நிர்மலா.

சாதாரண கவுன்சிலர் கே.கே.கே.கார்த்திக், போன்றவர்கள் எல்லாம் தெற்கு மாவட்டத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை அடிக்கடி நடத்தி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள் . இந்த மூன்று வருடத்தில் எந்தவித நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தியது இல்லை மண்டல் தலைவர் ஜெயா நிர்மலா .
இவரிடம் இந்த தகவல் கேட்டாலும் தனது கணவர் புஷ்பராஜிடம் கேளுங்கள் என்பார் அவரிடம் கேட்டால் தன்ராஜ் அல்லது வட்ட செயலாளரை கேளுங்கள் என்பார் ,
இந்த நிலையில் தற்போது நேற்று முன்தனம் அரியமங்கலம் மண்டல் அலுவலகத்தில் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து தான் பதவி ஏற்ற நாள் முதல் (3ஆண்டு) பணிகள் முடிந்த கோப்புகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்த கோப்புகள் அனைவத்தையும் கொண்டு வாருங்கள் எனக்கூறி, இதற்கான கமிஷன் தொகை என்னானது , இந்த பணிகளுக்கான கமிஷன் தொகை உடனடியாக எனக்கு வர வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் .
இதில் அதிகாரிகள் சிலர் அரியமங்கலம் மண்டலத்திற்கு பணிக்கு வந்து மூன்று முதல் ஆறு மாதங்கள் தான் ஆகிறது எனக் கூறியும் அதெல்லாம் எனக்குத் தெரியாது கமிஷன் தொகை கண்டிப்பாக வரவேண்டும் என கரராக கூறி உள்ளார் என கூறப்படுகிறது.
இதனால் செய்வதறியாது அரியமங்கலம் மண்டல் (JE/AW/ARO போன்ற ) அதிகாரிகள் புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.