திருச்சி சமயபுரத்தில்
இருசக்கர வாகனத்தில்
சாகசம் செய்தவர் கைது.

தற்போது தமிழக முழுவதும் ரீல்ஸ் மோகம் இளம் தலைமுறை இடம் தலைவிரித்து ஆடி வருகிறது . அதுவும் ஆபத்தான முறையில் பொது இடங்களில் பைக் ஓட்டுவது, ரயில் முன்பு நின்று வீடியோ எடுப்பது, மலை உச்சியில் நின்று என தங்களுக்கும் ஆபத்தான முறையில் பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர் .
இதுபோன்று பொது இடங்களில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் பலமுறை கூறியும் ரீல்ஸ் மோகம் அவர்களது கண்களை மறைத்து உள்ளது .
இதன் ஒரு நிகழ்வாக கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் ஆபத்தான முறையில் சாகசம் செய்த காணொலி. சமூக வலை தளங்களில் பரவியது.
இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வ நாகரத்தினம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், சமயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர் இந்த நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் துரைசிங்கம் நகர் ப. பாலகிருஷ்ணன் (வயது 28) என்பவரை
போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதான வாலிபர் கட்டிட தொழிலாளி என்பதும், இதுபோன்ற சாகசங்களில் பலமுறை ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
பின்னர் அவருக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை கூறி ஜாமினில் விடுவித்தனர்.

