Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜாதியை கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்த திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் . மனவேதனையுடன் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய முன்னாள் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா .

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி செயலாளராக பல ஆண்டுகளாக பொறுப்பு வகித்த சுரேஷ் குப்தா சமீபத்தில் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் இதனை தொடர்ந்து இன்று காலை திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது :-

 

திருச்சிராப்பள்ளி மாநகர, மாவட்ட அ.இ.அ.தி.மு.கவின் பல்வேறு பதவிகளை வகித்து கட்சி பணியாற்றி வரும் சுரேஷ்குப்தா ஆகிய நான்,

அ.தி.மு.க. கட்சியை வியாபார நோக்கத்தோடும், சாதி பாகுபாட்டோடும், தன்னுடைய சுய இலாபத்திற்காக உண்மை விசுவாசிகளை அவரது புறம் தள்ளிவிட்டு, நெருங்கிய உறவினர்கள் மற்றும் சாதியினருக்கு அதிக பதவிகள் கொடுத்து கட்சியை பாதாள குழிக்கு தள்ளும் திருச்சிராப்பள்ளி மாநகர மாவட்ட செயலாளராக செயல்பட்டு வரும் சீனிவாசன் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகர மாவட்டச் செயலாளராக இருக்கும் வரை நான் அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகி தூய தொண்டனாக மட்டுமே பணியாற்றுவேன்

நான் 1985-ம் ஆண்டு முதல் இன்றைய நாள் வரை ( அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவர்களின் காலத்திலிருந்து) அ.இ.அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றேன். நான் எனது வட்டத்திற்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் பகுதி செயலாளராக பதவி வகித்து வந்தேன்.

Suresh

நான் அம்மா அவர்களின் தீவிர விசுவாசியாவேன். அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்று அ.ம.மு.கழகத்தில் இணைந்து பிறகு மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த ஜெ.சீனிவாசன் என்பவர் அ.தி.மு.கவில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார்.
அவருக்கு பொறுப்பு வழங்கியவுடன் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான ஐயா. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஒருமையில் பேசியவருக்கு மாநகர் மாவட்ட பொறுப்பு வழங்கக் கூடாது என நானும். எனது ஆதரவாளர்களும் வாதிட்டோம். கோபமடைந்த சீனிவாசன் என்னையும் எனது ஆதரவாளர்களையும் சாதிரீதியாக ஒதுக்கி வந்தார்கள்.

பிறகு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி சீனிவாசனை கேவலமாக திட்டியதை காண்பித்து ஆர்பாட்டம் நடத்த முயற்சி செய்தேன். அதற்கு சீனிவாசன் என்னை சாதியின் பெயரை (நான் தேவேந்திர குல வேளாளர்) சொல்லி திட்டி கேவலமாக பேசினார். இதனால் எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் சீனிவாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை தொடர்ந்து எனது சமுதாயத்தை சேர்ந்த (SC தேவேந்திரகுல வேளாளர்) வட்ட செயலாளர், அணி செயலாளர் உள்ளிட்ட சிலரை ஏற்கனவே கட்சி பதவியை விட்டு நீக்கினார். இது தொடர்பாக நான் சீனிவாசனிடம் கேட்டேன். உடனே சீனிவாசன் கோபமடைந்து ‘இதுக்குதாண்டா பள்ள பயளுங்களையே கட்சிள சேக்கறது இல்ல, உங்கள் போன்றவனுங்களும் நானும் ஒன்னா, ஒழுங்கா போயிடு இல்லைனா, உன்னையும் கட்சியை விட்டு நீக்கி விடுவேன்’ என மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார். நான் கட்சியின் தலைமைக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதால் பொறுமையாக இருந்தேன்.

 

இந்நிலையில் சீனிவாசன் என்னை பற்றி தலைமைக்கு தவறான தகவல் கொடுத்து, தொடர்ந்து 40 ஆண்டு காலமாக அ.தி.மு.க.விலேயே இருந்து வரும் என்னை மார்க்கெட் பகுதி செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார். என தகவல் வந்தது.

நான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா, ஐயா எடப்பாடியாரின் விசுவாசியாக இருந்து வந்தேன். ஆனால் சீனிவாசன் என்னை திடீரென கட்சி பதவியிலிருந்து நீக்க சதி வேலை செய்து வருவதால், நான் இன்றைய தினத்திலிருந்து சீனிவாசனை திருச்சிராப்பள்ளி மாநகர், மாவட்ட செயலாளர் பதவிலிருந்து நீக்கும் வரை அ.இ.அ.தி.மு.க.வில் நான் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி, இன்று முதல் தூய தொண்டனாக இருப்பேன்.

மேலும் சீனிவாசன் மீது சட்டப்படி SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளையும், ஜனநாயக ரீதியாக போராட்டங்களையும் நடத்த உள்ளேன் என்பதை இதன்மூலம் பத்திரிக்கை நண்பர்களுக்கு செய்தியாக தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறினார்.

பேட்டியின் போது வழக்கறிஞர் பொன். முருகேசன் உடன் இருந்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.