ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அதிமுக செயலாளர் குமார்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளான இன்று திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலை மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவ படங்களுக்கு திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் மாலை அணிவித்து, மலர் தூவி இனிப்புகள் வழங்கி வேஷ்டி சேலை உள்ளிட்ட நலத்திட்டங்களுடன் காலை உணவு அன்னதானமும் வழங்கினார்.
திருச்சி சூரியூர் ராஜா என்கிற மணிகண்டன்
வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் எம்.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.சுபத்ரா தேவி சுப்ரமணி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்..ராவணன் எஸ்.கே.டி..கார்த்திக், துவாக்குடி நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், துணைச் செயலாளர் கணபதி, கூத்தைப்பார் பேரூர் செயலாளர் பி.முத்துக்குமார், பொன்மலை பகுதி செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன், திருவரம்பூர் பகுதி செயலாளர் எஸ்.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், அரியமங்கலம் பகுதி செயலாளர் ஏ..தண்டபாணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்..ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்..கார்த்திக், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மு.சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி.காசிராமன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் எம்.பி..ராஜா, திருவரம்பூர் தெற்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் குண்டூர் செல்வராஜ், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அவை தலைவர் என்.அண்ணாதுரை, அரியமங்கலம் பகுதி அவை தலைவர் கோவிந்தராஜ்,நாகூர் கனி, முத்து குமார், திருவரம்பூர் பகுதி அவைத் தலைவர் பி..முருகானந்தம், பகவதிபுரம் எம் எஸ் முருகானந்தம், கிழக்குறிச்சி வக்கீல் வீரமணி, அண்ணா நகர் ராஜராஜன், ஐடி வின் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜு என்கின்ற ரங்கசாமி, மகளிர் அணி நந்தினி சத்தியமூர்த்தி, இலக்கிய அணி ஒன்றிய இணை செயலாளர் காவிரி நகர் குணசேகரன் பர்மா எஸ் வி எஸ் சுந்தர் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.