Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் .

0

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஜெ.பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் இல்லம் தோறும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலில் மலைக்கோட்டையில் இருந்து பிரச்சாரம் தொடங்கியது . இதன் தொடர்ச்சியாக இன்று ஜங்ஷன் வழி விடுவேல் முருகன் கோவில் சன்னதி அருகே இருந்து தொடங்கிய நிகழ்ச்சியை திருச்சி அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்வில் பேரவை மாநில துணைச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான அரவிந்தன், மாவட்ட ஜெ.பேரவை துணைச் செயலாளர் அண்ணா சிலை முத்துக்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் பத்மநாதன், வனிதா, மாவட்ட பொருளாளர் ராஜசேகர், பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம்ஆர்ஆர் முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, கலைவாணன் , ரோஜர், நாகநாதர் பாண்டி , இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன், அம்மா பேரவை இணைச் செயலாளர் பொன்னர் , மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ஜான் எட்வர்ட், வர்த்தக அணி டிபன் கடை கார்த்திகேயன் , மீனவரணி மாவட்ட செயலாளரும் கவுன்சிலருமான அம்பிகாபதி, சுரேந்தர், டி எஸ் எம் செல்வமணி ,

டாஸ்மாக் பிளாட்டோ , கோழிக்கடை பாலு , 45 வட்ட செயலாளர் முத்துக்குமார், ஒத்தக்கடை மகேந்திரன் , மணிகண்டன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் சேது மாதவன், எம்ஜிஆர் இளைஞர் அணி சுரேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி வழக்கறிஞர் புவனேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஜெயஸ்ரீ, வழக்கறிஞர் தினேஷ் பாபு உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி இல்லாமல் தொடர்ந்து வீடு வீடாக சென்று அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறந்த திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.