Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கத்தியை காட்டி செல்போன் பறித்தவர் கைது .

0

'- Advertisement -

 

Ad banner

 

திருச்சியில்
லாரி டிரைவரிடம் செல்போனை பறித்தவர் கைது

TVK ad

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 39) லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த தில்லைநகர் பகுதியை சேர்ந்த குமார் (வயது 52) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு சுதாகர் மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து
குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டி சுதாகரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

இது தொடர்பாக சுதாகர் கண்டோன்மெண்ட் காவல் நிலையம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

அவர் அளித்த புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.