Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

3 வயது குழந்தையை தவிக்க விட்டு விட்டு தனது கல்லூரியில் படிக்கும் மாணவனுடன் மாயமான பேராசிரியை.

0

'- Advertisement -

Ad banner

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம், புதுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஜெபராஜ்.

இவரின் மனைவி சீலியா கரோலின் (வயது 27).இவர் பெரம்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது.

இதனிடையே, கடந்த ஜன.24 அன்று கல்லூரிக்கு சென்ற பேராசிரியை கரோலின், பின் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் மனைவியை காணவில்லை என ஜான் ஜெபராஜ் அவரது உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை.

TVK ad

இதனையடுத்து, மனைவி மாயமானதாக ஜான் ஜெபராஜ் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜான் ஜெபராஜ் புகாரி பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை விசாரணை தொடங்கி காணாமல் போன பேராசிரியை தேடி வந்தனர்.

விசாரணையில், சீலியா கரோலினுடன், அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் பயின்று வரும் 20 வயது மாணவர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்தது தெரியவந்தது.

இதனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டில் இருந்து வெளியேறி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கும் நிலையில், இருவரும் திருமண எண்ணத்துடன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்ணின் கணவரும், அவரின் குழந்தையும் பேராசிரியையின் செயலால் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது காவல்துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.