Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம்

0

திருச்சி மாவட்டம் சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (25.01.2025 சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

திருச்சி மாவட்டம் சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (25.01.2025 சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சமயபுரம், மண்ணச்சநல்லூர் சாலை, வெங்கங்குடி, வ.உ.சி. நகர் பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், வலையூர், கரியமாணிக்கம், பாலையூர், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூர், மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர்நகர், கூத்தூர், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, பனமங்கலம், குமரகுடி, அழகியமணவாளம், திருவரங்கபட்டி, கோவத்தகுடி, சாலப்பட்டி, எடையபட்டி, அய்யம்பாளையம்,தத்த மங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுபத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி, மாரு திநகர், நம்பர் 1 டோல்கேட், தாளக்குடி, உத்தமர்கோவில், நாராயணன் கார்டன் மற்றும் கீரமங்கலம் பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது” என்று அவர் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.